News April 9, 2025
மீனவர் வலையில் சிக்கய அரிய வகை ஆமை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி உப்புத் தண்ணீர் தீவு அருகே நேற்று முன்தினம் விரிக்கப்பட்ட வலையில் 100 கிலோ ‘ஆலிவர் ட்ரீ’ என்ற இனத்தை சார்ந்த பெண் ஆமை சிக்கியது. பைபர் நாட்டுப்படகில் சென்ற ஒப்பிலான் ஒத்தப்பனையைச் சேர்ந்த மீனவர் சுகன் ரவி (35), இதைப் பார்த்தார். ஆமையின் துடுப்பு பகுதியில் சுற்றிக்கொண்ட வலையை நுணுக்கமாகப் பிரித்து ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டார்.மீனவரை வனச்சரகர் பாராட்டினார்.
Similar News
News September 19, 2025
இராமநாதபுரம் தபால் சேவை குறைதீர் கூட்டம்

இராமநாதபுரத்தில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகின்ற செப்.20ம் தேதி தபால் சேவை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. தபால் அனுப்பியதில் குறைப்பாடுகள் இருந்தாலும், இதற்கு முன்பாக நடைபெற்ற முகாமில் மனு கொடுத்திருந்து தீர்வு கிடைக்கவில்லை என்றாலும், உங்களது வேறு குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியுள்ளார்.
News September 19, 2025
இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் அபதாரத்துடன் விடுதலை

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை.02 அன்று மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி மீனவர்களுக்கு தலா 50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்தும் வரை மீன்வர்களை சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
News September 19, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.