News April 17, 2025

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

image

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News December 15, 2025

மயிலாடுதுறை: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

image

மயிலாடுதுறை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.இங்கு<> கிளிக்<<>> செய்து கணக்கு உருவாக்குங்க.
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News December 15, 2025

மயிலாடுதுறை: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<> tahdco.com<<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது மயிலாடுதுறை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். இதனை அனைவர்க்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 15, 2025

மயிலாடுதுறை: தீர்த்தவாரியில் திரண்ட பொதுமக்கள்

image

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் நேற்று கார்த்திகை கடைசி ஞாயிறு கடை முக தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக குத்தாலம் பகுதியில் உள்ள 6 கோயில்களை சேர்ந்த சுவாமி அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி காவிரி தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!