News April 17, 2025
மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 20, 2025
நாகை: சிறப்பு ரயில் கேட்டு எம்.பி கோரிக்கை

புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா நாளை தொடங்க உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் நாகூர் வருவார்கள் என்பதால் காரைக்காலில் இருந்து, நாகூர் வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம் நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் வை.செல்வராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
News November 20, 2025
நாகை மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.20) நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க!
News November 20, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் இருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவர்கள், 50 கன்னியாஸ்திரிகளுக்கு ECS முறையில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


