News October 16, 2024

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: ஆட்சியர்

image

தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை அடுத்து வட தமிழகம் மற்றும் புதுவை கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் காற்று வீசக்கூடும் என்பதால் காரைக்கால் மீனவர்கள் 15, 16 மற்றும் 17 ஆம் தேதி வரை மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டு உள்ளார். மேலும் தற்போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றார்.

Similar News

News November 20, 2024

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து காரைக்காலிலும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 20, 2024

புதுவையில் 23 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

புதுவை தொழிலாளர் துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி இன்று வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் வரும் 23 ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 2500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதில் 10, 12 வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் இளநிலை பட்டம் முடித்தவர்கள் பங்கேற்கலாம்.

News November 19, 2024

மாணவியின் புகைப்படம் வைரல் – வழக்கு

image

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வரும் 22 வயது மாணவி ஒருவர் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் படித்து வருகிறார். வரலாறு படிக்கும் மாணவரான சூர்ய நாராயணன் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, பிற மாணவர்களுக்கும் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளார். இந்நிலையில்,  மாணவியின் புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.