News April 14, 2025
மீனவர்கள் இன்று இரவு கரை திரும்ப உத்தரவு

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாக்க இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைக்காலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று இரவு12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வள துறை கூறியுள்ளது. அதனைத் தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.
Similar News
News October 17, 2025
ராம்நாடு: பட்டாசு கடைகளில் ரெய்டு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் நேற்று பாதுகாப்பு அம்சங்கள், அவசரகால பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆய்வு செய்தார். உடன் ஆர்.எஸ் மங்கலம் தாசில்தார் ராமமூர்த்தி, ஆர்.ஐ ராஜ லெட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
News October 17, 2025
ராமநாதபுரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

ராமநாதபுரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
News October 16, 2025
BREAKING பரமக்குடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் வராத ரூ.35,300 பணம் மற்றும் வெடி, கிப்ட் பாக்ஸ்களை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்கள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.