News September 22, 2024
மீனவர்களை விடுவிக்க ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சர்வதேச கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மகாபாரதியை மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் உறவினர்கள் இன்று நேரில் சந்தித்தனர். தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி மனு வழங்கினர்.
Similar News
News November 20, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் வருகின்ற நவம்பர் 23-ஆம் தேதி அன்று மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக்கடலில் வரும் நவ.22-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் நவ.21-ஆம் தேதி (வியாழன்) நள்ளிரவு முதல் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் வரும் 21-ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.