News August 9, 2024
மீண்டும் நாடு திரும்பும் வெளிநாட்டு பறவைகள்

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள சங்கரபாண்டியாபுரத்திற்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து எண்ணற்ற பறவைகள் வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும், கடந்த மார்ச் மாதம் வந்த ஏராளமான செங்கால் நாரை பறவைகள், மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்தன. தற்போது குஞ்சுகள் பறக்க தொடங்கியதால் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளன.
Similar News
News January 8, 2026
விருதுநகர் அருகே தகர செட்டில் பட்டாசு தயாரிப்பு

வெம்பக்கோட்டை அருகேயுள்ள கீழக் கோதை நாச்சியார்புரம் பகுதியில் போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து சோதனை நடத்தினர். அப்போது வெள்ளை மருது 33, என்பவர் தனது வீட்டுக்கு அருகில் தகர செட் அமைத்து பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பட்டாசுகள், மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News January 8, 2026
விருதுநகர்: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி!

விருதுநகர் மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு இங்கு <
News January 8, 2026
விருதுநகர் அருகே பெண் திடீர் தற்கொலை

அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் என்பவரது மனைவி தில்லை சிவகாமி(52). அர்ச்சுணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்த நிலையில் தில்லை சிவகாமி மன சோர்வுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தில்லை சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


