News April 3, 2025

மீண்டும் சூடு பிடிக்கும் தர்பூசணி விற்பனை

image

கந்தக பூமியான சிவகாசியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாரல் மழை பெய்ததன் காரணமாக தர்பூசணி விற்பனை மந்தமாகி தேக்கமடைந்தது. இதனிடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மீண்டும் தர்பூசணி விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திண்டிவனத்திலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட தர்பூசணி கிலோ ரூ.20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News November 8, 2025

விருதுநகர்: 10th தகுதி.. ரூ.50,400 சம்பளத்தில் வேலை., APPLY NOW

image

விருதுநகர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நாளைக்குள் (நவ. 9) விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

News November 8, 2025

விருதுநகர்: பாலியல் குற்றவாளி மீது குண்டாஸ்

image

விருதுநகரில் எஸ்.எஸ் மாணிக்கம் நகரை சேர்ந்த சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த திருச்சுழி சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த முருகன் (29) மீது மேற்கு போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர் இதுபோன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை தடுக்க எஸ்.பி கண்ணன் பரிந்துரை பெயரில் ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவின் குண்டர் தடுப்பு சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

News November 8, 2025

விருதுநகர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!