News April 16, 2024
மின் தடையால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை சுமாா் 20 முறை மின்விநியோகம் தடை செய்யப்பட்டது. மாதந்தோறும் பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் கொரட்டி பகுதியில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 29, 2025
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் விழிப்புணர்வு செய்தி ஓன்று வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (டிச-29) வெளியிட்ட செய்தியில் வாகனங்களில் செல்லும்போது பக்கவாட்டு கண்ணாடிகளை கவனித்து வாகனம் ஓட்ட வேண்டும். இதனால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.
News December 29, 2025
திருப்பத்தூர்: கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தடுப்பூசி

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சி குரும்பர் காலனி தெரு பகுதியில் –கால்நடை பாரமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று தடுப்பூசிப்பணி இன்று (டிச 29) தொடங்கியது. இதை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News December 29, 2025
திருப்பத்தூரில் ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் (FLC) நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இன்று (டிச.29) திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தார்.


