News September 27, 2024
மின்மாற்றி கொள்முதலில் அரசுக்கு ரூ.400 கோடி இழப்பு: அன்புமணி

தமிழ்நாடு அரசு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமனி கூறியுள்ளார். குறிப்பாக, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை மின் வாரியத்திற்கு அதிக விலை கொடுத்து 45,800 மின்மாற்றிகள் வாங்கப்பட்டதாகவும், இதனால் மின் வாரியத்திற்கு ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்த அவர், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென கூறியுள்ளார்.
Similar News
News December 2, 2025
BIG BREAKING: சென்னையில் பழுதாகி நின்ற மெட்ரோ!

சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில் காலை 6 மணி அளவில் சுமார் 40 நிமிடம் பழுதாகி திடீரெனெ நடுவழியில் நின்றது. சென்னை சென்ட்ரல் மற்றும் உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நடுவே மெட்ரோ ரயில் பழுதாகி நின்றதால் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News December 2, 2025
சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச.2) விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். ‘டிட்வா’ புயல் காரணமாக இன்று காலை 8 மணி வரை சென்னையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News December 2, 2025
‘டிட்வா’ புயல்; சென்னைக்கு இன்று மழை எச்சரிக்கை!

வங்க கடலில் உருவான ‘டிட்வா’ புயலின் காரணமாக சென்னையில் நேற்று (டிச.1) முழுவதும் கனமழை பெய்தது. இந்த நிலையில், சென்னைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இன்று விடியற்காலையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


