News November 23, 2024
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

இராமநாதபுரம் மின்வாரிய செயற்பொறியாளர்(விநியோகம்) அலுவலகத்தில் நவம்பர் 26 காலை 11 முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இராமநாதபுரம் கோட்டத்திற்குட்பட்ட மக்கள் மின் விநியோகம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என இராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர்(பொ) பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
ராமநாதபுரம் அருகே 160 பவுன் நகை கொள்ளை

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனை அருகில் வசிப்பவர் அர்ச்சுனன், 62; ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று காலை இவரது வீட்டின் பின்பக்க கேட், கதவுகள் உடைக்கப்பட்டிருப்பது குறித்து அப்பகுதி மக்கள், அர்ச்சுனனுக்கு தகவல் தெரிவித்தனர்.வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு, அதில் 160 சவரன் தங்க நகைகள், ரூ.18 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் திருடப்பட்டதாக, ஆர்.எஸ்.மங்கலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
News December 8, 2025
ராமநாதபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராமநாதபுரம், விருதுநகர்,தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 8, 2025
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மழை நீட்டிப்பு எச்சரிக்கை

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்றி மற்றும் மன்னார் வளைகுடா காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு டிச-12-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வலியுறுத்தப் படுகிறது. தற்போது, இராமநாதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்கிறது.


