News April 22, 2025
மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ X <
Similar News
News April 22, 2025
குழந்தை வரம் தரும் செங்கல்பட்டு முருகன்

செங்கல்பட்டு அச்சிறுபாக்கத்தில் மரகத தண்டாயுதபாணி (நடுபழநி) திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகன் சிலை மரகத கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் இருக்கும் முருகர் பழநி தண்டாயுதபாணியை போலவே இருப்பதால் ‘நடுபழநி’ என இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் வங்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 22, 2025
ஹெராயின் வைத்திருந்த அஸ்ஸாம் வாலிபர்கள் 2 பேர் கைது

புனித தோமையர் மலை போலீசார் நேற்று மாலை, ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள தபால் அலுவலகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி வந்த 2 பேரை சோதனை செய்தபோது, 25 கிராம் ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரித்ததில் அஸ்ஸாம்மை சேர்ந்த மன்சூல் இஸ்லாம் (28), முபாரக் அலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர்.
News April 22, 2025
தாம்பரம்: சீசிங் ராஜா கூட்டாளி கைது

தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்ராஜ் (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. சீசிங் ராஜாவின் கூட்டாளியான இவர் போலீசார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ என பயந்து சில மாதங்களுக்கு முன் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில் ஜாமினில் வந்த இவர் சேலையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார்.