News August 3, 2024
மின்சார ரயில் சேவைகள் ரத்து

தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (ஆக.3) முதல் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரையும், இரவு 10 முதல் 11.59 வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.
Similar News
News November 3, 2025
செங்கல்பட்டு: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
செங்கல்பட்டு: பெண்களிடம் அத்துமீறல்- கம்பி எண்ணும் காமுகன்!

பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(45). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இதனிடையே சந்திரசேகர் கடந்த சில மாதங்களாக, சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் அச்சம் நிலவி வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News November 3, 2025
செங்கல்பட்டு: தலைகுப்புற லாரி கவிழ்ந்து விபத்து

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று மாலை, கோவளம் பகுதியில் இருந்து கல்பாக்கம் பகுதிக்கு சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இழந்து, கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர்த்தப்பினார். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


