News August 8, 2024
மின்சார ரயிலை செங்கல்பட்டோடு நிறுத்தியது ஏன்?

ராஜ்யசபாவில் நேற்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், “திண்டிவனத்தில் ரத்து செய்யப்பட்ட உழவன், மங்களூர், சேலம், காரைக்கால் ரயில்களை இயக்க உடனடி நடவடிக்கை வேண்டும். மின்சார ரயிலை செங்கல்பட்டோடு நிறுத்தியது ஏன்? எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை மின்மயமாக்கலுடன் இரட்டைப் பாதை மாற்றப்பட்டுவிட்டதால், மின்சார ரயில்களை திண்டிவனம், விழுப்புரம் வரை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
Similar News
News February 7, 2026
செங்கை: 5 பேர் அதிரடி கைது!

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விமான பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 23 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சாக்களை பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் பதுக்கி வைத்து கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட கஞ்சாக்களின் மதிப்பு 23 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
செங்கை: ஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு!

படப்பை அருகே, முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் அபிலாஷ் (25) என்பவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. படுகாயமடைந்த அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய விமல், மகேஷ், திவாகர் மற்றும் சிவா ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 7, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (பிப்.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


