News August 8, 2024
மின்சார ரயிலை செங்கல்பட்டோடு நிறுத்தியது ஏன்?

ராஜ்யசபாவில் நேற்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், “திண்டிவனத்தில் ரத்து செய்யப்பட்ட உழவன், மங்களூர், சேலம், காரைக்கால் ரயில்களை இயக்க உடனடி நடவடிக்கை வேண்டும். மின்சார ரயிலை செங்கல்பட்டோடு நிறுத்தியது ஏன்? எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை மின்மயமாக்கலுடன் இரட்டைப் பாதை மாற்றப்பட்டுவிட்டதால், மின்சார ரயில்களை திண்டிவனம், விழுப்புரம் வரை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.
Similar News
News December 5, 2025
செங்கல்பட்டு பெண்களே இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்- 1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்
News December 5, 2025
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட மக்களே உஷார் உங்களுக்காக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மானியத்துடன் கடன் பகுதி நேர வேலை வீட்டிலிருந்து வேலை போன்றவை மூலம் கால் வந்தால் எடுக்க வேண்டாம் என கூறுகின்றனர். ஓடிபி நம்பரை யாரிடமும் சொல்லக்கூடாது. மீசோ அமேசானில் இருந்து கார் பணம் பரிசாக விழுந்துள்ளது எனக் கூறி பணம் கட்ட சொன்னால் பணம் கட்டாதீர்கள். தெரியாத நபர்கள் வீடியோ காலில் தொடர்பு ரத்து செய்யவும்.
News December 5, 2025
செங்கல்பட்டு: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.


