News April 16, 2025
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
தேனி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 5, 2025
தேனியில் ரூ.10 லட்சம் பரிசு: கலெக்டர் அறிவிப்பு!

தேனியில் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம் மூன்றாம் பரிசு ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை <
News December 5, 2025
தேனி: பட்டா வைத்திருப்போருக்கு நற்செய்தி!

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <


