News April 6, 2025
மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(25) மணலூர்பேட்டையில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் இன்று (நவ.26) அதிகாலையில், பார்சல் கண்டெய்னர் லாரி ஒன்று சாலை ஓரத்தில்
நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 26, 2025
இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் இன்று (நவ.26) கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில், காவல்துறையினர் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1). முதலில் <


