News March 25, 2025
மின்சாரம் தாக்கி மீனவர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த லிபிஸ்டன் என்பவர் 16 மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பாம்பன், தூத்துக்குடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது லிபிஸ்டன் படலில் உள்ள சுவிட்டை ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். சக மீனவர்களை அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைத்து கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.
Similar News
News April 18, 2025
ரூ.30 கோடி மதிப்பிலான ரிசார்ட்க்கு சீல்

கொல்கத்தாவை சேர்ந்த டிஎம் ட்ரேடர்ஸ், கேகே ட்ரேடர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் போலி நிறுவனங்களை உருவாக்கி அன்னிய செலாவணி வணிகத்தில் ஈடுபடுவதாக ஏமாற்றி ரூ.270 கோடி மோசடி செய்தனர். வழக்கை விசாரித்த கொல்கத்தா ED அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ராமேஸ்வரத்தில் உள்ள ரூ.30 கோடி மதிப்புள்ள தனியார் சொகுசு விடுதியின் 60 அறைகளுக்கு கொல்கத்தா அமலாக்க பிரிவு அதிகாரிகள் சீல் வைத்து நோட்டீஸ்.
News April 18, 2025
ராமநாதபுரம்: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RAIL MADDED* என்ற அப்ளிகேஷனை இந்த <
News April 18, 2025
சாலையை கடக்க முயன்றவர் மீது அரசு பஸ் மோதி பலி

பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்று மாலை பாம்பன் பகுதியிலிருந்து அரசு பஸ்சில் ராமநாதபுரம் சென்றார். போதையில் பிரச்னை செய்ததால், இவரை வேதாளை பஸ் நிறுத்தத்தில் கண்டக்டர் இறக்கி விட்டார். அங்கு சுற்றித் திரிந்த ஆறுமுகம் நேற்றிரவு (ஏப்-17) சாலையை கடக்க முயன்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.