News June 25, 2024

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

image

பெரம்பலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி, பவளக்கொடி தம்பதியினரின் மகள் நிகிதா(10). இவர் அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனக்கு வயிறு வலிப்பதாக பள்ளி ஆசிரியரிடம் கூறிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்தவர் செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

பெரம்பலூர்: மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கல்

image

பெரம்பலூர், அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு, இன்று இலவச மிதிவண்டியை போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி ஆகியோர் வழங்கினார்கள். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் மற்றும் கழக பொறுப்பாளர் வி. ஜெகதீசன் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 24, 2025

பெரம்பலூர்: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!