News March 27, 2025
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியமாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 25-ஆம் தேதி அன்று மாலை வீட்டிலிருந்து மின் மோட்டாரை ஆன் செய்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை இளவரசு மார்ச் 26-ம் தேதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 26, 2025
கள்ளக்குறிச்சியில் 3200 போலீசார் குவிப்பு!

கள்ளக்குறிச்சிக்கு இன்று (டிச.26) தமிழ்நாடு முதலமைச்சர் வருகையையொட்டி, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், 3200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டி.ஐ.ஜி உமா தேவராணி, 10 காவல் கண்காணிப்பாளர்கள், 10 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 30 டி.எஸ்.பி மற்றும் 80 காவல் ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
News December 26, 2025
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.25) இரவு முதல் நாளை (டிச.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
கள்ளக்குறிச்சி:வாஜ்பாய் படத்திற்கு மரியாதை செலுத்திய பாஜகவினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே,மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் 101 வது பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது.இந்த விழாவில் நகர தலைவர் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இன்று (டிச.25) பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன், மாவட்ட பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


