News May 16, 2024
மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே சாணாங்காட்டு தோட்டம் பகுதியில் இன்று காலை தனது விவசாய நிலத்தில் சரஸ்வதி (50) என்பவர் யூகலிப்டஸ் மரத்தின் மேல் மின் கம்பிகள் மோதுவதை எடுத்துவிட முயன்ற போது மின்சாரம் தாக்கியது. அவரை தடுக்க சென்ற அவரது கணவர் தங்கவேல் (58) மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
பரமத்தி வேலூர் அருகே பயங்கரம்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பொத்திக்காட்டைச் சேர்ந்த ராசம்மாள் (73) என்ற மூதாட்டியை, அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வாயில் துணியை அடைத்து, கை கால்களைச் சேலையால் கட்டிப்போட்டனர். பின்னர் அவரிடமிருந்து ஏழரை பவுன் தங்கச் செயின் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை..!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கிறிஸ்துமஸ் (ம) புத்தாண்டு நிறைவடைந்துள்ளதால், முட்டையின் தேவை குறைந்துள்ளது. எனவே முட்டை விலை இறங்கு முகத்தில் உள்ளது.