News January 1, 2025
மின்சாரத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதா காரணமாக, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக, சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்சாரத்துறையை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.
Similar News
News November 16, 2025
திருப்பூர்: காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும்.
News November 15, 2025
திருப்பூரில் இரவு நேர வந்து பணியில் காவலர்கள்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்ற செயல்களை தடுக்கவும் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகரில் இன்றைய தினம் அனுப்பர்பாளையம் சரக உதவி ஆணையர் பிரதீப் குமார் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் சமூகவலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News November 15, 2025
திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வடமாநில வாலிபர் கைது!

திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ருசிகேஸ் புயான்(29) என்பதும், அவரிடம் 3 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


