News April 27, 2025

மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்

image

அஞ்சுகிராமத்தில் வடமாநில வாலிபர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். போலீசார் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 29, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் 30.04.2025 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்ட முகவரிப் பட்டியலில் உள்ள தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

News April 29, 2025

குமரிக்கு புதிய நீதிபதிகள் நியமனம்

image

சென்னை குடும்ப நல கோர்ட் கூடுதல் நீதிபதி தனசேகரன் நாகர்கோவில் விரைவு மகளிர் கோர்ட் நீதிபதியாகவும் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு 17வது கூடுதல் நீதிபதி தோத்திர மேரி குழித்துறை கூடுதல் நீதிபதியாகவும் குழித்துறை மாவட்ட கூடுதல் நீதிபதி முருகன் தூத்துக்குடி மகளிர் விரைவு கோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News April 29, 2025

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தொடர்பு எண்கள்

image

காவல் துறை கண்காணிப்பாளர் -4652220047
காவல் துறை துணை கண்காணிப்பாளர்:
4651250741 -தக்கலை
4652220197 -நாகர்கோவில்
4652246947 -கன்னியாகுமரி
உதவி காவல் துறை கண்காணிப்பாளர் – 4651226227 – குளச்சல்
அனைத்து மகளிர் காவல் நிலையம்:
4652275949 -நாகர்கோயில்
4651271128 -குழித்துறை
4651228500- குளச்சல்
*ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!