News March 22, 2025
மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, சென்னையில் வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நந்தனம் அரசு கலைக் கல்லூரி (Government Arts College, Nandanam) வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. யூஸ் பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 25, 2025
1 மணி நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு

சென்னையில், கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 7 இடங்களில் செயின் பறிப்புகள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி MRC மைதானம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்ட மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு, வேளச்சேரி டான்சி நகரில் 2 இடங்களில் செயின் பறிப்பு, திருவான்மியூர் இந்திரா நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு என காலை 6 முதல் 7 மணிக்குள் 15 சவரன் நகைக்குள் மேல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
News March 25, 2025
போராட்டத்தில் குதித்த நடிகை சோனா

நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்மோக்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸாக எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான ஹார்ட் டிஸ்குகளை தனது மேனஜர் எடுத்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனியில் உள்ள பெப்சி யூனியனில் புகார் அளித்ததோடு, கடந்த சில நாட்களாக அங்கும் இங்கும் அலைக்கழிப்பதாக நேற்று (மார்.24) ஃபெப்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
News March 24, 2025
சென்னையில் புகழ்பெற்ற 7 சிவன் கோயில்கள்

1. கபாலீஸ்வரர் கோயில்- திருமயிலை, 2. மருந்தீஸ்வரர் கோயில்- திருவான்மியூர், 3. திருவல்லீஸ்வரர் கோயில்- திருவலிதாயம், 4.மாசிலாமணீஸ்வரர் கோயில்- திருமுல்லைவாயில், 5. தியாகராஜ சுவாமி கோயில்- திருவொற்றியூர், 6 .வேதபுரீஸ்வரர் கோயில்- திருவேற்காடு, 7. தேனுபுரீஸ்வரர் கோயில்- மாதம்பாக்கம். ஷேர் பண்ணுங்க.