News February 17, 2025

மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை

image

மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவரின் மகன் ஐயாசாமி (19) என்பவரை அதே ஊரைச் சேர்ந்த வினோத்குமார், ஆதீஸ்வரன், வல்லரசு ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து ஐயாசாமியை வெட்டியதில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினர் சார்பில் தீர்வு உதவித் தொகை ரூ.62500 வழங்கினர்.

Similar News

News October 17, 2025

சிவகங்கை: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளம்

image

சிவகங்கை மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள்<> இங்கே க்ளிக் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News October 17, 2025

திருப்பத்தூர் அருகே புள்ளி மான் பலி

image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், வேட்டங்குடி வன பகுதிகளில் புள்ளளி மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த சாலையை கடக்கும் பொழுது விபத்துக்குள்ளாகிறது. திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது. இதை கண்டவர்கள் சிவகங்கை வனத்துறைக்கு அறிவித்து இறந்த புள்ளி மானை அகற்ற தெரிவித்துள்ளார்கள்.

News October 17, 2025

சிவகங்கையில் 5 பெண்கள் உட்பட 24 பேர் கைது

image

தேர்தல் வாக்குறுதி படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர்.கலெக்டர் அலுவலக ஆர்ச் முன் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். ஓய்வு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

error: Content is protected !!