News August 15, 2024
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் அவர்கள் கோவை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று K. பிரபாகர் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தவெகவினர் மனு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நவம்பர்-8 ஆம் தேதி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, போளூர், வந்தவாசி, செய்யார், திருவண்ணாமலை, செங்கம், கலசப்பாக்கம், கிழ்பென்னத்தூர் ஆகிய அனைத்து இடங்களிலும் சுற்றுபயணம் மேற்கொள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள் பாரதி, சத்யா, கதிரவன், உதயகுமார் ஆகியோர் இன்று செப்டம்பர்.16 மனு அளித்தனர்.
News September 16, 2025
தி.மலை: குழந்தை வரம் தரும் அற்புத தலம்

போளூர் அருகே இயற்கை எழில் சூழ்ந்த சம்பந்தகிரி மலைகளுக்கு அருகே அருணகிரிநாதரால் போற்றிப்பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. குறிப்பாக இத்தலத்தில் பத்து நாள் திருவிழாவாக நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவில் ஸ்ரீ பால முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தில் ஐதீகமாகவே உள்ளது. இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 16, 2025
தி.மலையில் மழை அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்களாக அதிகமான வெயில் காணப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று மற்றும் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை அறிக்கை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தேவைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.