News October 23, 2024
மாவட்ட எஸ்பி முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அவர்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருங்கள். மேலும், ஆன்லைன் விளையாட்டுக்களில் உங்கள் நேரத்தையும், பணத்தையும் இழக்க வேண்டாம் என்றும் இது போன்ற விளையாட்டுகளில் பல மோசடிகள் நடைபெற்று பலர் பணத்தை இழந்துள்ளனர் என்று பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News November 16, 2025
ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் விவரங்களும்

இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளது ரோந்து பணியானது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது பொதுமக்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
News November 15, 2025
திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் பலி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கும் பச்சகுப்பம் ரெயில் நிலையத்திற்கும் இடையே இன்று (நவ.15) சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 15, 2025
கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் நெகிழ்ச்சி

(நவ.15) வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீம குளம்ஊராட்சியில் மந்தார குட்டை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லிகலந்து கொண்டு கூட்டத்திற்கு வந்த ஒரு தாயிடம் இருந்த இரண்டு குழந்தைகளை குழந்தையை தாய் அரவணைப்பது போல் போல் மாவட்ட ஆட்சியர் தன் மடியில் அமர வைத்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்பட்டது. ஆட்சியரின் செயல் அனைவரையும் கவனத்தை ஈர்த்தது.


