News June 28, 2024

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த் தீர்வாயம்

image

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று (ஜூன்.27) வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்றது. இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், நில உடைமை ஆவணம், ஆக்கிரமிப்பு அகற்றம், வருவாய் துறை சான்றிதழ் உள்ளிட்டவை குறித்து மொத்தம் 83 பேர் மனு அளித்தனர்.

Similar News

News November 25, 2025

தேனி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா??

image

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க போன் -ல இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்க போன் நம்பர் பதிவு செய்யுங்க. இனி உங்க போனுக்கு தேவை இல்லாத அழைப்புகள் , மெசேஜ் வராது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 25, 2025

தேனி: ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

image

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாந்தி (38). இவருக்கும் இவரது கணவருக்கும் நேற்று முன் தினம் குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு சாந்தி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.24) அவர் அப்பகுதியில் உள்ள வராக நதி ஆற்றில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News November 25, 2025

தேனி: கையும் களவுமாக சிக்கிய அதிகாரி சஸ்பெண்ட்

image

தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய லட்சுமணன் (38), விவசாய இலவச மின் இணைப்பு வழங்க விவசாயி ஒருவரிடம் ரூ.20,000 லஞ்சம் கேட்ட நிலையில் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக லட்சுமணனை சஸ்பெண்ட் செய்து தேனி மின் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!