News February 17, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடை பெறுவது வழக்கம். அதன் அடிப்படையிலே இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
Similar News
News July 11, 2025
தி.மலை மாவட்ட DEO-க்கள் இடமாற்றம்

தமிழக கல்வித்துறையில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலவலர்கள் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர். அதன்படி, தி.மலை இடைநிலை கல்வி அலுவலராக பணியாற்றிய காளிதாஸ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ப.ஜோதிலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தி.மலை தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சி.ப.கார்த்திகேயன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏ.சுகப்பிரியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். *நண்பர்களுக்கு பகிருங்கள்*
News July 11, 2025
கிரிவலம் சென்ற தெலங்கானா பக்தா் கொலை: இருவா் கைது

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தெலங்கானாவை சேர்ந்த வித்தியாசாகா்(32) என்பவர் (ஜூலை.07) அன்று கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு, அவரிடம் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்தசம்பவத்தில், தி.மலைச் சோ்ந்த குகனேஸ்வரன்(21), தமிழரசன்(25) ஆகியோரை போலீஸாா் நேற்று (ஜூலை.10) இரவு கைது செய்தனா். மேலும், கிரிவலம் சென்ற பக்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பக்தர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
News July 11, 2025
தி.மலை- ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்

தி.மலையிலிருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூரிற்கு நேற்று (ஜூலை 10) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. இது ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆந்திர பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த நிலையில், தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த ரயிலால் தி.மலை, திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பக்தர்கள் பயனடைவர். *திருப்பதி, காளஹஸ்தி செல்ல நினைக்கும் நண்பர்களுக்கு பகிரவும்*