News February 17, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதம் தோறும் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடை பெறுவது வழக்கம். அதன் அடிப்படையிலே இன்று திங்கள்கிழமை முன்னிட்டு மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார்.
Similar News
News February 23, 2026
தி.மலை: மகள் கண்முன்னே பெற்றோர்கள் பலி

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் அப்பாண்டைராஜன் (49). இவரது மனைவி ஜீவிதா (41) தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். மகள் திவ்யஸ்ரீ (16) +2 படித்து வருகிறார். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் 3 பெரும் பைக்கில் வந்தபோது எதிரே வந்த கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மகள் கண்முன்னே பெற்றோர்கள் உயிரிழந்தனர்.
News February 23, 2026
தி.மலை: தூக்கில் தொங்கிய லாரி டிரைவர்

வந்தவாசி சவேரியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த யேசு பாலு மகன் சின்ன முத்துவேல் (27). லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தார். இதனை குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். வழக்கம் போல் அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*
News February 22, 2026
தி.மலை: வாடகை வீட்டில் இருக்கீங்களா….

தி.மலையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!


