News December 4, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோர் கைது

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து அமைப்புகள் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். நிலைமை மோசமாவதை உணர்ந்து போலீசார் 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
Similar News
News July 8, 2025
குமரியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News July 7, 2025
சாமிதோப்பில் கொலை செய்யப்பட்டவர் குறித்து தகவல் தெரிவிக்கவும்

தென்தாமரை குளம் அருகே சாமி தோப்பில் கடந்த 5ம் தேதி ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது இதுவரையிலும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தென்தாமரைகுளம் போலீசார் இறந்து போனவர் படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிக்க கூறி அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு சமூக வலைதளங்கள் மூலமாகவும் சுவரொட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News July 7, 2025
குமரியில் இடைநிலை ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு

குமரி மாவட்டத்தில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு கடந்த மூன்றாம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 11-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது. இடம் மாறுதல் கூறி விண்ணப்பித்தவர்கள் வரிசைப்படி கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.