News April 14, 2024
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு மையம் தொடக்கம்

நாகை மக்களவைத் தொகுதியில் பணியாற்றும் வேறு மாவட்டங்களில் வாக்கு உள்ள தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை இன்று முதல் ஏப்ரல்.16ஆம் தேதி வரை செலுத்திட நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் வசதி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து , மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இன்று முதல் நபராக வாக்கு செலுத்தினார்.
Similar News
News November 20, 2025
SIR சிறப்பு முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வருகின்ற 22. 11 .2025 மற்றும் 23. 11 .2025 ஆகிய இரு நாட்களில் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கான சிறப்பு உதவி மையம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
நாகை: 10th போதும் அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 1383 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, டிப்ளமோ, துறை சார்ந்த டிகிரி
3. கடைசி தேதி : 02.12.2025
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,51,100
5. வயது வரம்பு: 18 – 40 (SC/ST – 45, OBC – 43)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 20, 2025
நாகை: பேருந்து நிலையத்தில் கிடந்த பிணம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று சுமார் 70 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் சம்பவயிடத்திற்கு பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


