News September 14, 2024
மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி பதிவு

சிவகாசி அருகே மாரனேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஒரே அலுவலகத்தில் மகன் மென்பொருள் பொறியாளர், தந்தை தச்சர், வறுமை மற்றும் சமூக அந்தஸ்தில் உள்ள தலைமுறை இடைவெளிகளை கல்வி எவ்வாறு இணைக்கிறது என்பதை இந்த புகைப்படம் காட்டுகிறது” என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தனது X தளத்தில் தந்தை மகன் ஒரே அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படத்தை பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
Similar News
News December 12, 2025
விருதுநகர்: ரேஷன் கார்டில் பிரச்னையா… இங்க போங்க

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை 13ம் தேதி ரேஷன் அட்டை திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறும் இம்முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல், கைபேசி எண் பதிவு செய்தல் மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்று பயனடையலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News December 12, 2025
சிவகாசி: இளம் பெண்ணிடம் அத்துமீறிய அக்கா கணவர்

சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண் பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இவரின் அக்காவின் கணவரான மாரீஸ்வரன் (37) என்பவர் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இளம்பெண் கூச்சலிட்டதால் மாரீஸ்வரன் இளம்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இளம்பெண் புகாரில் மாரீஸ்வரன் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
News December 12, 2025
விருதுநகர்: அரசு வேலை வேண்டுமா…இலவச பயிற்சி

விருதுநகர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2a முதன்மை தேர்வில் பங்கேற்பவர்களுக்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இந்நிலையில் இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உடையோர் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாகவும் தெரிவிக்கலாம்.


