News November 14, 2024
மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய ஊர் பொதுமக்கள்
குமாரபாளையம் அப்புராயர் சத்திரம் பகுதியில் குடியிருப்போர் நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு பகுதியில் தங்கியுள்ளதாகவும், வெளியேறுமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி,மீண்டும் அதே பகுதியில் வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நேற்று ஊர் பொதுமக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது.
Similar News
News November 19, 2024
நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 19ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.40 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை அதனால் ஏற்பட்ட குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் விலையில் மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.40 என்ற விலையிலேயே நீடிக்கிறது.
News November 19, 2024
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – செல்வராஜ் (9498153088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
News November 19, 2024
முத்தங்யிகில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாத செவ்வாய்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம், பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.