News August 14, 2024

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை 7401703484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

Similar News

News November 24, 2025

தி.மலை: விவசாயி மீது டூவீலர் மோதி விபத்து!

image

தூசி, வெம்பாக்கம் அருகே பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீதி மோதி, அவர் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூசி போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

News November 24, 2025

தி.மலை: அரசு தேர்வர்களே.. உங்களுக்கு ஓர் GOOD NEWS!

image

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். <>இங்கு <<>>கிளிக் செய்து, வழங்கப்பட்டுள்ள இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த பயனுள்ள தகவலை அரசு தேர்வுக்கு தயாராகும் நண்பர்களுக்கு பகிருங்கள்!

News November 24, 2025

திருவண்ணாமலையில் உலக சாதனை…!

image

திருவண்ணாமலையில் உலக சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, தீபம் வடிவில் 1,500 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் நடன நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை படைத்தனர். அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சி பக்தர்களும் பொதுமக்களும் பெரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

error: Content is protected !!