News April 17, 2025

மாவட்ட அளவிலான நிகழ்ச்சிக்கு அழைப்பு

image

திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் (ஏப்ரல் 16) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் மாவட்ட அளவிலான நிகழ்ச்சி வருகின்ற ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News December 1, 2025

நெல்லை: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

நெல்லை மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
திருநெல்வேலி (ம) – 0462-250761
பாளையங்கோட்டை – 9445000381
அம்பாசமுத்திரம் – 9445000386
நாங்குநேரி – 9445000387
இராதாபுரம் – 9445000388
மானூர் – 9445796458
சேரன்மகாதேவி – 9445796459
திசையன்விளை – 9499937025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 1, 2025

நெல்லை: நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி

image

தச்சநல்லூர் தேநீர் குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பேச்சிமுத்து (42). இவரை முன் பகை காரணமாக நேற்று தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (38) என்பவர் தச்சநல்லூர் சாய்பாபா கோவில் அருகே வழிமறித்து அருவாளால் வெட்டிக் கொல்ல முயன்றார். அவர் தப்பியோடி சென்று அளித்த புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர்.

News December 1, 2025

நெல்லை: மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

image

அம்பை அருகே மேல ஏர்மால்புரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). விவசாய தொழிலாளியான இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது உறவினர் தோட்டத்தில் மின் பழுதை சரி செய்தபோது ஸ்டே கம்பியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுக்குறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை.

error: Content is protected !!