News August 25, 2024

மாவட்ட அளவிலான கேரம் போட்டி துவக்கம்

image

கீழ் அணைக்கரை எஸ் முருகையன் நினைவு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட கேரம் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் போட்டியை தமிழ்நாடு கேரம் சங்க துணைத் தலைவர் சீனி கார்த்திகேயன் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Similar News

News August 31, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தி.மலை வருவாய் கோட்டத்தை சேர்ந்த திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு மற்றும் கீழ்பென்நாத்தூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை வரும் செவ்வாய்க்கிழமை அன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தி .மலை கலைஞர் பன்னாட்டு நூற்றாண்டு அரங்கில் நடத்துமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

News August 31, 2025

ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமில் 8,620 பேர் பயன்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 8,620 பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமைலை மாவட்டத்தில் நடந்த 3 முகாம்களில் மட்டும் 8,620 பேர் பயன் அடைந்துள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் வெவ்வேறு பகுதிகளில் 57 முகாம்கள் நடைபெற உள்ளது. இன்றோடு (நேற்று) 4-வது முகாம் நிறைவடைகிறது. இன்னும் 53 முகாம்கள் நடைபெற உள்ளது.

News August 31, 2025

தி.மலை: சம்பள பிரச்சனையா? ஒரு CALL போதும்

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். மாவட்ட தொழில் துறை துணை இயக்குநர் 04175-220544, தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147.*தொழிலாளர் அனைவருக்கும் பகிரவும்*

error: Content is protected !!