News January 25, 2025
மாவட்ட அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு

நாளை ஜன. 25 தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காலை 10.00 மணியளவில் 13-17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர், தமிழ் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News November 8, 2025
தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வழி

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News November 8, 2025
திருச்செந்தூர் கடற்கரையில் தங்க இனி அனுமதி இல்லை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் கடற்கரையில் பக்தர்கள் தங்கி வந்த நிலையில், திருட்டு மற்றும் பொருள்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் காரணமாக கடற்கரையில் இரவு யாரும் கடற்கரையில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 8, 2025
தூத்துக்குடி: ஒரே நாளில் மூன்று பேர் மீது குண்டாஸ்

கோரம்பள்ளம் அருகே உள்ள புதுக்கோட்டையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கில் மேல வாகை குலத்தை சேர்ந்த ஆறுமுகநயினார் சுடலைக்கண்ணு இசக்கி பாண்டி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். இதனை அடுத்து இந்த மூன்று பேரையும் புதுக்கோட்டை போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


