News March 28, 2025
மாவட்டத்தில் 7 துணை தாசில்தார்கள் மாற்றம்

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வந்த யுவராஜ் ஆட்சியர் அலுவலகத்தில் சி பிரிவு உதவியாளராகவும், அங்கு பணியாற்றி வந்த ராஜ்குமார் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டம் முழுதும் 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News July 5, 2025
ராணிப்பேட்டையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள சிறிய மலை அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவையொட்டி, 07.07.2025 (திங்கட்கிழமை) அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்கு ஈடாக 19.07.2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாள்.
News July 5, 2025
பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பாதீர்

இன்று 05.07.2025, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையினர் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, பிரபல நிறுவனங்களின் பெயரால் பொய்யான வேலை வாய்ப்பு விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பின்னர் பதிவு/செயல்முறை கட்டணமாக பணம் கேட்டு சைபர் மோசடியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் இதுபோன்ற ஏமாற்றங்களை தவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மோசடிக்கு ஆளானால் உடனே 1930 எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
News July 5, 2025
பத்திரப்பதிவு துறையின் ஆன்லைன் போர்டல் பற்றி தெரிஞ்சிக்கோங்க!

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே <