News August 15, 2024

மாவட்டத்தில் பின்தங்கிய 41 பள்ளிகளுக்கு சிறப்பு கவனம்

image

2024 – 25 கல்வியாண்டின் காலாண்டு தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளிகளுக்கு தனிக் கவனம் செலுத்தி தேர்ச்சி சதவீதத்தை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 26 பள்ளிகள், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 15 பள்ளிகள் என 41 பள்ளிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Similar News

News November 7, 2025

சிவகாசியில் கூடுதல் நீதிமன்றம் அமைக்க உத்தரவு

image

சிவகாசி பகுதியிலிருந்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்காக இங்குள்ளவர்கள் ஸ்ரீவி, விருதுநகர் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பல வழக்குகள் முடியாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகாசியில் கூடுதல் மாவட்ட நீதி மன்றம் தொடங்க வேண்டும் என்ற வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கையை பரிசீலித்த சென்னை நீதிமன்ற பதிவாளர் கூடுதல் நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

News November 7, 2025

விருதுநகர் வேலைவாய்ப்பு மையம் சார்பில் இலவச பயிற்சி

image

விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group-II/IIA முதன்மைத் தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக இலவச பயிற்சி வகுப்பு 10.11.2025 முதல் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News November 6, 2025

விருதுநகர்: ரூ.5 லட்சம் இலவச இன்சூரன்ஸ்! APPLY பண்ணுங்க

image

விருதுநகர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!