News August 4, 2024
மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்து சேவை

சென்னையில், மாற்றுத் திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்து சேவை இன்று (ஆகஸ்ட் 4) முதல் தொடங்கப்பட உள்ளன. சக்கர நாற்கலியுடன் எற இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாலையில் இருந்து பேருந்தில் ஏறும் உயரம் குறைவாக இருக்கும். தாழ்தள உயரத்தை இடதுபுறம் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்க ‘KNEELING’ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வேகத்தடை இல்லாத பிரதான சாலைகளில் மட்டுமே இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Similar News
News November 8, 2025
சென்னை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

சென்னை மக்களே! உங்களின் 10th, +2 மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால், இனி கவலையில்லை. ஈஸியாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசின் <
News November 8, 2025
6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 8, 2025
சென்னை: விஜய்க்கு முதல்வர் மறைமுக பதிலடி!

திமுக – தவெக இடையே தான் வரும் தேர்தலில் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது ஆண்டு விழாவில், ‘திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப் பார்க்கின்றனர். அதிலும், சில அறிவிலிகள் திமுக போல் வெற்றி பெற்றுவிடுவோம் என பகல் கனவு காண்கின்றனர். திமுக போல் வெற்றி பெற அறிவும், உழைப்பும் தேவை’ என பேசினார்.


