News April 7, 2025
மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டத்தில், 2ஆவது மனைவி மற்றும் தனது 27 வயது மகளுடன் வசிப்பவர் 70 வயதுடைய நபர். மகள், வாய் பேசாத முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். மகளுக்கு, அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர், உறவினர் பெண்ணிற்கு தந்தையின் அத்துமீறல் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை நேற்று (ஏப்ரல் 6) கைது செய்தனர்.
Similar News
News April 8, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் BC/MBC வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். <
News April 8, 2025
வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் கூட்டம்

திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். *விவசாயிகளுக்கு பகிரவும்*
News April 8, 2025
தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க