News March 27, 2025
மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து – ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பயண சலுகை அட்டையினை வருகின்ற 30.06.2025 வரை பயன்படுத்தி, கட்டணமில்லா பயணச் சலுகையினை பெறலாம். மேலும் வருகின்ற 01.04.2025 மற்றும் 02.04.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 19, 2025
சிவகங்கையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News December 19, 2025
சிவகங்கை: பஸ் கண்டக்டருக்கு ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு

பரமக்குடியை சேர்ந்தவர் அரசு டவுன்பஸ் கண்டக்டர் மயில்பாண்டியன் 28. நேற்று மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். நேற்று இரவு 7:30 மணியளவில் இளையாங்குடி பகுதி விஜயன்குடி ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டூவீலர்களில் வந்த 3 பேர் பஸ்சை நிறுத்தி மயில்பாண்டியை ஒடஒட அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை GH-ல் சிகிச்சை பெறுகிறார்.
News December 19, 2025
சிவகங்கை – காரைக்குடியில் மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மற்றும் காரைக்குடி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (டிச.20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, காரைக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும் என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்தடை இடங்கள் பற்றி முழுதாக அறிய <


