News August 14, 2024
மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் பெற சிறப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கண் பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 20,21,22,23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மீனம்பாக்கம் முக்தி செயற்கை அவயவங்கள் நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. தகுதியுடையவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்.
Similar News
News December 19, 2025
BIG BREAKING: செங்கல்பட்டில் 7,01,901 வாக்காளர்கள் நீக்கம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 7,01,901 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 20,85,464 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
News December 19, 2025
செங்கல்பட்டு:கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News December 19, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


