News March 27, 2025

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியரக குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் இந்த குறைதீர் முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 13, 2025

ஈரோட்டில் பாஸ்ட் FOOD கடை வைக்க ஆசையா?

image

ஈரோடு, சித்தோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக நவ.24 முதல் டிச.6.ஆம் தேதி வரை இலவச துரித உணவு தயாரிப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் பங்குபெறுவோருக்கு விடுதி வசதி, உணவு அனைத்தும் இலவசம். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0424-2400338, 8778323213 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

ஈரோடு: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 சோதனை அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். டிச.2ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

பவானி அருகே திருநங்கை அதிரடி கைது!

image

பவானி அருகே உள்ள சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தை மேடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் திருநங்கை ஒருவர் ஈடுபடுவதாக சித்தோடு போலீசருக்கு கிடைத்த தகவலின் பெயரில் குந்தவை (23) என்ற திருநங்கையை பிடித்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 700 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!