News April 17, 2025
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை அனுப்ப மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை மாநில ஆணையர், எண்.05, காமராஜர் சாலை, லேடி வெலிங்கடன் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை-600005 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது tnscpwdcircuitcourt@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ (30.04.2025) ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 9499933236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
தோரணமலை முருகனுக்கு இன்றைய அலங்காரம்

திரவிய நகர் அடுத்துள்ள மாதபுரம் அருகே அமைந்துள்ள தோரணமலை கோயிலில் இன்று காலை வல்லவ விநாயகர் தோரணமலை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைக்கு பின்னர் மலை அடிவார பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
News December 2, 2025
தென்காசி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்க வழி இருக்கு. இந்த <
News December 2, 2025
தென்காசியில் மாணவர் போக்சோவில் கைது

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும், வி.கே. புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஏமாற்றி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானதுடன் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. புகாரின் பேரில் ஆலங்குளம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை போக்சோவில் கைது செய்தனர்.


