News November 22, 2024

மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மேற்கு வட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் (26.11.2024) தேதி காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் பூங்கொடி அறித்துள்ளார். 

Similar News

News October 22, 2025

JUST IN: திண்டுக்கல் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை!

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(அக்.22) விடுமுறை இல்லை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளுக்குச் சென்று வர வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 22, 2025

திண்டுக்கல்: கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்!

image

திண்டுக்கல் :நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(32). திருப்பூரில் கூலி வேலை செய்யும் இவருக்கு, அங்கு பப்லு எனும் வட மாநிலத்தைச் சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆறுமுகத்தின் வீட்டிற்கு வந்த பப்லு, அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 22, 2025

திண்டுக்கல்லில் 40 பேருக்கு தீக் காயம்!

image

தீபாவளியன்று கவனக்குறைவால் பட்டாசு வெடித்ததில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் காயமடைந்தனர். நிலக்கோட்டை, நத்தம், ஆத்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழனி ஆகிய பகுதிகளில் 13 அரசு மருத்துவமனைகளில் 28, திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் என 40 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!