News August 3, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய எம்.பி

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வைத்து ஆர்.இ.சி.எல். சமூக பொறுப்புணர்வு நிலையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.
Similar News
News November 21, 2025
தூத்துக்குடி: VOTER ID-ல் இதை மாத்தனுமா?

தூத்துக்குடி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 21, 2025
தூதுக்குடியில் இணைந்த 12 புதிய ஊராட்சிகள்

தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இளையரசன்ந்தல் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். நீண்ட நாள் போராட்டத்துக்குப் பிறகு இளையரசன்ந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
News November 21, 2025
தூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (நவ. 21) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம், இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுபற்றி தெரியாதவர்களக்கு SHARE செய்து உதவுங்க.


