News March 29, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பஸ் பயண சலுகையின் செல்லத்தக்க காலம் 31.3.2024 ஆகும். இந்நிலையில் சலுகை காலம் முடிவடைய உள்ளதாலும், நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும் 2023-24-ல் வழங்கப்பட்ட அதே பஸ் பயண அட்டையை 30.6.2024 வரை மாற்றுத்திறனாளிகள் தங்கு தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
கடலூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு …

கடலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News December 5, 2025
கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
News December 5, 2025
கடலூர்: தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி

மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கந்தவேல் மகள் சுருதி (19). வேலூரில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது தாய் தீபாவுடன் சுருதி உறங்கியுள்ளார். இதையடுத்து அதிகாலை அவரது தாய் எழுந்து பார்த்தபோது சுருதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு கதறிய அவரது தாய் அளித்த புகாரின் பேரில், புதுநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


