News June 28, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று (ஜூன் 28) நடந்தது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News October 31, 2025
வேலூர்: ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

வேலுார் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (23) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 30) காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பிரவீன் அறையில் இருந்த மின்விசிறியில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேலுார் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, இறப்பின் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News October 31, 2025
வேலூர்: துணை முதல்வர் வருகை தேதி மாற்றம்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (அக்டோபர் 30) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக வரும் நவம்பர் மாதம் 3 மற்றும் 4ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
News October 30, 2025
வேலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின்கீழ் நவம்பர் மாதத்திற்கு
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கும் வகையில், நவம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


